மக்களின் பணத்தை கோடி கணக்கில் மோசடி செய்த கேடி தம்பதி

x

சென்னையில் வாடிக்கையாளர்களின் நிரந்தர வைப்பு தொகையில் இருந்த பணத்தை கையாடல் செய்த வங்கி மேலாளர் மற்றும் அவரது கணவரை மத்திய

குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்த நிர்மலா ராணி என்பவர், தனியார் வங்கியின் இரு கிளைகளில் மேலாளராக பணியாற்றி வந்தார். இவர்,

வங்கி வாடிக்கையாளர்களின் நிரந்தர வைப்பு தொகையில் உள்ள பணத்தை வேண்டுகோளின்றி தன்னிச்சையாக முடித்து அந்த பணத்தை வங்கி கணக்கிலிருந்து தன்னுடைய பெயரிலுள்ள கர்நாடக வங்கி கணக்கிற்கு மாற்றி ரூபாய் 1 கோடியே 23 லட்சம் ரூபாயை கையாடல் செய்துள்ளதாக தனியார் வங்கியின் மண்டல மேலாளர் கன்வர் லால் என்பவர் புகார் அளித்தார். அதனடிப்படையில் சென்னை மத்திய குற்றப்பிரிவு வங்கி மோசடி தடுப்பு பிரிவில் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் வாடிக்கையாளர்களின் நிரந்தர வைப்பு தொகை கணக்கிலிருந்து ரூபாய் 1 கோடியே 23 லட்சம் ரூபாய் பணத்தை சிறிது சிறிதாக எடுத்து தனது வங்கிக் கணக்கிற்கு மாற்றி கையாடல் செய்துள்ளார். பின்னர் தனது வங்கி கணக்கிலிருந்த பணத்தை தனது கணவர் இளங்கோவன் பெயரில் உள்ள வங்கி கணக்கிற்கு மாற்றம் செய்து அந்த தொகையை ATM களில் இருந்து எடுத்து மோசடி செய்ததும் விசாரணையில் தெரிய வந்தது.

இதனையடுத்து, நிர்மலா ராணி மற்றும் அவரது கணவர் இளங்கோவனை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் மத்திய சிறையில் அடைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்