முதல்வர் மு.க.ஸ்டாலின் உடல்நிலை...! காவேரி மருத்துவமனை வெளியிட்ட அறிக்கை

x

முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், சிகிச்சைக்காக அவர் சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

முதல்வர் ஸ்டாலினுக்கு நேற்று முன்தினம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் தனிமைப்படுத்திக் கொண்டதாக அவர் டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். தொடர்ந்து அவர் தனது இல்லத்தில் தனிமைபடுத்திக் கொண்டிருந்த நிலையில், இன்று மருத்துவ பரிசோதனைக்காக ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனைக்கு வருகை தந்தார். மருத்துவமனையில் முதலமைச்சருக்கு நுரையீரல் தொற்று பாதிப்பு குறித்து பரிசோதனை மேற்கொள்ள சிடி ஸ்கேன் பரிசோதனை செய்யப்பட்டது. இது தொடர்பாக மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா நோய் அறிகுறி இருப்பதால் மருத்துவமனையில் முதல்வர் அனுமதிக்கப்பட்டு, மருத்துவர்களின் கண்காணிப்பில் இருப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்