"யாருக்கும் போட்டியாக காசி பயணம் அறிவிக்கப்படவில்லை" - அமைச்சர் சேகர்பாபு

x

யாருக்கும் போட்டியாக காசி பயணம் அறிவிக்கவில்லை என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.

அறநிலையத்துறை அறிவிப்பின்படி, முதற்கட்டமாக 66 பேர் கடந்த 22ஆம் தேதி ராமேஸ்வரத்தில் இருந்து காசிக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

அவர்கள் பயணத்தை முடித்துக்கொண்டு எழும்பூர் ரயில் நிலையம் வந்த போது, அமைச்சர் சேகர்பாபு வரவேற்றார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அடுத்ததாக மார்ச் 1 மற்றும் 8ஆம் தேதி அழைத்துச் செல்லப்படுவார்கள் என்றார்.

யாருக்கும் போட்டியாக இந்த பயணம் அறிவிக்கவில்லை என்ற அமைச்சர், தமிழக அரசு அறிவித்த பின்னரே காசி சங்கம‌ம் நிகழ்ச்சி நடத்தியிருக்கலாம் என்று தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்