"காசியும் தமிழகமும் ஒன்று தான்" - உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் தமிழில் ட்வீட்|Kasi tamil sangamam

x

பிரதமர் மோடியின் சொந்த தொகுதியான வாரணாசியில் 'காசி தமிழ் சங்கம்' விழா தொடங்க உள்ளது. டிசம்பர் 16 ஆம் தேதி வரை மாதம் வரை சுமார் ஒரு மாத காலம் நடக்க இருக்கும் இந்த விழாவில் பங்கேற்க தமிழகத்தில் இருந்து காசி செல்ல சிறப்பு ரயில்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில், 'காசியாக இருந்தாலும் சரி, தமிழகமாக இருந்தாலும் சரி, நமது கலாச்சாரம், ஆன்மீகம் மற்றும் தத்துவ மரபு ஒன்றுதான்' என தமிழில் ட்வீட் செய்து உத்தர பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் காசி வருகை தரும் தமிழர்களை வரவேற்றுள்ளார். நவம்பர் 19 ஆம் தேதி நடைபெறவுள்ள விழாவில் பிரதமர் மோடி கலந்து கொள்ளவுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்