ஐயோ..அம்மா..! அலறிய சிறுவன்...ஆக்ரோசமாக சுற்றி வளைத்த நாய்கள் - பதறவைக்கும் திக் திக் வீடியோ.

x

ஐயோ..அம்மா..! அலறிய சிறுவன்...ஆக்ரோசமாக சுற்றி வளைத்த நாய்கள் - பதறவைக்கும் திக் திக் வீடியோ...

கரூர் அருகே லிங்கம நாயக்கன்பட்டி ஊராட்சி பகுதியில், சிறுவனை பல தெருநாய்கள் துரத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 6 வயது சிறுவனான முகமது உவேஸ், மதராஸா பள்ளியை முடித்து விட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது, மூப்பர் தோட்டம் எனும் இடத்தில் 6-க்கும் மேற்பட்ட தெரு நாய்கள் சிறுவனை துரத்தி, வட்டமிட்டுள்ளது. அப்போது சிறுவன் கதறி அழ, அவனது சத்தத்தை கேட்டு வந்த அப்பகுதி மக்கள், நாய்களை விரட்டி சிறுவனை காப்பாற்றியுள்ளனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், மனதை பதைபதைக்க வைக்கும் அந்த காட்சிகள் வெளியாகி உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்