கரூர் ரெய்டு.. சோபனாவிடம் பல கட்ட விசாரணை.. முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக தகவல்

கரூரில் அரசு ஒப்பந்ததாரர் எம்.சி.சங்கர் ஆனந்த் அலுவலகத்தில் பணிபுரியும் கரூர், வடக்கு காந்தி கிராமம் பகுதியில் உள்ள சோபனா- பிரேம்குமார் இல்லத்தில் கடந்த 26 ஆம் தேதி முதல், வருமான வரி சோதனை நடைபெற்றது. ஆறு நாட்கள் நடைபெற்ற சோதனையில் சோபனாவிடம் பலகட்ட விசாரணைகள் நடைபெற்றன. இந்நிலையில், சோதனை முடிவடைந்து விட்டதாக அதிகாரிகள் நேற்றிரவு தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து அவரது வீட்டிற்கு அளித்து வந்த பாதுகாப்பையும் விலக்கிக் கொள்ளுமாறு, காவல்துறை உயர் அதிகாரிகளை வருமானவரித்துறை அதிகாரிகள் கேட்டுக் கொண்டனர். அதற்கு இணங்க காவல் துறை பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டது. இந்த சோதனையின்போது பல முக்கிய ஆதாரங்களை வருமான வரித் துறை கைப்பற்றி இருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com