வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி- தாக்குதல் நடத்தி 12 சவரன் நகைகள் பறிப்பு-அதிர்ச்சி சம்பவம்

x

கரூர் மாவட்டம் குளித்தலையில் வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி மீது தாக்குதல் நடத்தி, அவர் அணிந்திருந்த 12 சவரன் நகையை மர்ம நபர்கள் பறித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

குளித்தலை கீழமுதலியார் தெருவைச் சேர்ந்த திரிபுரசுந்தரி என்ற மூதாட்டிக்கு 2 மகன்கள், 4 மகள்கள் உள்ள நிலையில், இவரின் கடைசி மகன் நாராயணனுக்கு திருமணம் ஆகாததால், மூதாட்டி அவருடன் வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில், நாராயணன் வழக்கம் போல் வேலைக்கு சென்றிருந்த போது, வீட்டில் திரிபுரசுந்தரி மட்டும் தனியாக இருந்துள்ளார்.

அப்போது, வீட்டின் உள்ளே புகுந்த மர்ம நபர்கள், மூதாட்டியை சரமாரியாக தாக்கி அவர் அணிந்திருந்த, 12 சவரன் நகையை பறித்துச் சென்றுள்ளனர்.

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த குளித்தலை போலீசார் மர்ம நபர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்