"ஆக.7-ந் தேதி மெரினாவில் கருணாநிதி நினைவிடம் திறக்கப்படும்" - பொதுக்கூட்டத்தில் அறிவித்த முதல்வர்

x

நாடாளுமன்ற தேர்தலில், பாஜகவை வீழ்த்த நாடு முழுவதும் இருக்கும் கட்சிகள் ஒன்று சேர வேண்டும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் வலியுறுத்தினார்.

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இதில் திமுக கூட்டணி கட்சி தலைவர்களான கி.வீரமணி, கே.எஸ்.அழகிரி, வைகோ, முத்தரசன், திருமாவளவன், கே.பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், ஜுன் 3ந் தேதி நடைபெற விருந்த கருணாநிதியின் நூற்றாண்டு விழா ,ஒடிசா ரயில் விபத்து காரணமாக ரத்து செய்யப்பட்டது என்றார். கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை அடுத்தாண்டு ஜுன் 3ந் தேதி வரை கொண்டாட உள்ளோம் என்றும், கன்னியாகுமரி தொடங்கி கும்மிடிப்பூண்டி வரை கருணாநிதியின் கால் படாத இடம் இல்லை என்றும் தெரிவித்தார். சென்னை மெரினா கடற்கரையில் ஆகஸ்ட் 7-ந் தேதி கருணாநிதி நினைவிடம் திறக்கப்படும் என்று அறிவித்த முதலமைச்சர் ஸ்டாலின், வரும் 23 ஆம் தேதி பீகார் வர வேண்டும் நிதிஷ் குமார் அழைப்பு விடுத்துள்ளதாகவும் அகில இந்திய அளவில் ஒரு கூட்டனியை அமைக்க வேண்டும் என்று அவர் தொலைபேசியில் கூறியதாகவும் தெரிவித்தார்.Next Story

மேலும் செய்திகள்