ஜூன் 3ல் கருணாநிதி நினைவிடம் திறப்பு? - கட்டுமானங்களை ஜூன் 3க்குள் முடிக்க பணிகள் மும்முரம்

x

வரும் ஜூன் 3ம் தேதிக்குள், மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவிடத்தை திறக்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது.

சென்னை, மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடம் அருகே, 39 கோடி ரூபாய் செலவில் கருணாநிதி நினைவிடம், தமிழ்நாடு அரசு சார்பில் அமைக்கப்பட்டு வருகிறது.

இதற்கான நிதி ஒதுக்கி, கடந்த ஆண்டு நவம்பர் 8ம் தேதி அரசாணை வெளியிடப்பட்டது.

இதனிடையே இதை, கருணாநிதியின் 100வது பிறந்த நாளான வரும் ஜூன் 3ம் தேதி திறக்க அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான பணிகள் 2 புள்ளி 21 ஏக்கர் பரப்பளவில், தீவிரமாக நடைபெற்று வருகிறது.

கலை, இலக்கியம், அரசியல் ஆகிய துறைகளில் முத்திரை பதித்ததன் அடையாளமாக, உதயசூரியன் போன்று கருணாநிதி நினைவிட முகப்பில், 3 வளைவுகள் அமைக்கப்படுகிறது.

மேலும் திறந்தவெளி காட்சி அரங்கம், அருங்காட்சியகம் அமைக்கப்படுகிறது.

இதற்காக கருணாநிதி நினைவிட வளாகத்தில் இரும்பு தடுப்புகள் மற்றும் தகரம் மூலம் 30 அடி உயரத்துக்கு வேலி அமைக்கப்பட்டது.

இந்நிலையில், இந்த பணிகளை இன்னும் 6 மாதங்களில் முடிக்கும் வகையில், கட்டுமானங்கள் தற்போது தீவிரமாக நடந்து வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்