கார்த்தி சிதம்பரத்தின் மறு ஆய்வு மனு.. மத்திய அரசு பதில் அளிக்க உத்தரவு

x

கார்த்தி சிதம்பரத்தின் மறு ஆய்வு மனு.. மத்திய அரசு பதில் அளிக்க உத்தரவு


சட்ட விரோத பண பரிவர்த்தனை வழக்கில் தீர்ப்பை மறு ஆய்வு செய்யக் கோரிய கார்த்தி சிதம்பரத்தின் மனுவுக்கு பதில் அளிக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக கார்த்தி சிதம்பரம் தாக்கல் செய்த மறு ஆய்வு மனுவை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. ரமணா தலைமையிலான அமர்வு விசாரித்தது. கார்த்தி சிதம்பரத்தின் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபில், மறு ஆய்வு மனுவை விசாரித்து தீர்ப்பளிக்கும் வரை, இடைக்கால தடை விதிக்க கோரிக்கை விடுத்திருந்தார். இருதரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட உச்ச நீதிமன்றம், கார்த்தி சிதம்பரத்தின் மறு ஆய்வு மனு தொடர்பாக பதில் அளிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.


Next Story

மேலும் செய்திகள்