நின்று கொண்டிருந்த லாரி மீது மோதிய ஜீப் | விபத்தில் உயிரிழந்த 5 பேர் | சாலையோரம் நிகழ்ந்த கோர சம்பவம்

x

கர்நாடகா அருகே சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரி மீது ஜீப் மோதிய விபத்தில், 5 பேர் உயிரிழந்தனர். இஸ்லாமிய திருவிழாவில் பங்கேற்பதற்காக, 18 பேர் கொண்ட குழுவினர் ஜீப்பில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, சக்ரா கிராமத்தில் சாலையோரம் நின்று கொண்டிருந்த சரக்கு லாரி மீது, அவர்கள் சென்ற ஜீப் மோதியது. இந்த விபத்தில், ஜீப்பில் பயணித்தவர்களில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், 13 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஓட்டுநரின் தூக்க கலக்கத்தால், விபத்து ஏற்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்