மசூதி முன்பு காவிக்கொடி ஏற்றி தோரணம் கட்டிய இந்து அமைப்பினர்.. வெடித்த மோதல் - பரபரப்பு சம்பவம்

x

கர்நாடகாவில் மசூதி முன்பு இந்து அமைப்பினர் காவிக்கொடி ஏற்றிய விவகாரத்தில் ஏற்பட்ட மோதலால் பரபரப்பு ஏற்பட்டது.

கர்நாடகா மாநிலம், சிங்கேரி பகுதியில் அமைந்துள்ள மசூதி ஒன்றின் முன்பாக நேற்று இரவு இந்து அமைப்பினர் சிலர் காவி கொடி தோரணம் கட்டி பெரிய காவி கொடியையும் ஏற்றியுள்ளனர்.

இதைப் பார்த்த இஸ்லாமிய சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் தட்டிக் கேட்டனர்.

இந்த விவகாரம் தொடர்பாக இரு தரப்பினரிடையே ஏற்பட்ட வாக்குவாதம், மோதலில் முடிந்தது.

இந்நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் காயமடைந்தவர்களை வீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

இதையடுத்து, இரு தரப்பினரிடையே போலீசார் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது


Next Story

மேலும் செய்திகள்