ஆன்லைனில் ஆர்டர் செய்த லேப்டாப்.. தீபாவளிக்கு வந்த பார்சல்.. அதிர்ந்து போன வாடிக்கையாளர்

x

கர்நாடக மாநிலம் மங்களூருவில் பிளிப்கார்டில் லேப்டாப் ஆர்டர் செய்த நபருக்கு, பார்சலில் கற்கள் வந்ததால் அதிர்ச்சி அடைந்தார்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மங்களூருவை சேர்ந்த சின்மய ரமணா, தனது நண்பருக்காக பிளிப்கார்ட் நிறுவனத்தில் லேப் டாப் ஆர்டர் செய்திருந்தார்.

அப்போது, அவருக்கு வந்த பார்சலில், லேப் டாப்பிற்கு பதிலாக சிறிய கல் துண்டுகளும், ஈ வேஸ்டுகளும் இருந்துள்ளது.

இதனால், அதிர்ச்சி அடைந்த சின்மய ரமணா, இது குறித்து புகைப்பட ஆதாரத்துடன் ப்ளிப்கார்ட் நிறுவனத்திற்கு, இ-மெயில் மூலம் தகவல் தெரிவித்ததுடன், தனது ட்விட்டர் பக்கத்திலும் பதிவிட்டார்.

இதனையடுத்து, அவரின் புகார் ஏற்றுக் கொள்ளப்பட்டு, லேப்டாப்பிற்காக செலுத்திய முழு தொகையும் திருப்பி அளிக்கப்படும் என, பிளிப்கார்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்