பாட்டு Sound-ஐ குறைக்க சொன்னதால் வெறி கொண்டு தாக்கிய IT ஊழியர்கள் - பலியான ராணுவ கர்னலின் சகோதரர்

x

பாடலின் ஒலியை குறைக்க சொன்னதால் கோபத்தில் மென்பொருள் ஊழியர்கள் நடத்திய தாக்குதலில் ராணுவ கர்னலின் சகோதரர் உயிரிழந்தார். பெங்களூரு விக்யான் நகரில் உள்ள பிருந்தாவன் கார்டன் குடியிருப்பு பகுதியில் ராணுவ கர்னல் டேவிந்தின் சகோதரர் லியோட் என்பவர் வசித்து வந்தார். இவரின் வீட்டில் அருகில் வசிக்கும் மென்பொருள் ஊழியர்கள் 4 பேர் குடிபோதையில் அதிக சத்தத்துடன் பாடல்களை போட்டு நடனமாடி கொண்டு இருந்தனர். லியோடின் தாய் இதய நோயாளி என்பதால் ஒலியை குறைக்குமாறு அவர்களிடம் லியோட் கூறியிருக்கிறார். இதனால் கோபமடைந்த அவர்கள் 4 பேரும் லியோடை கடுமையாக தாக்கியுள்ளனர். தடுக்க வந்த லியோடின் சகோதரி மீதும் அவர்கள் தாக்குதல் நடத்தினர். இதில் பலத்த காயமடைந்த லியோட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டும் சிகிச்சை பலனின்றி பலியானார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் சம்பந்தப்பட்ட 4 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்