"தடையை மீறி கர்நாடகா மேகதாது அணையை கட்ட முயற்சி" - அன்புமணி ராமதாஸ்

x

அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டின் ஒப்புதலும், காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் அனுமதியும் இல்லாமல் மேகதாது அணையை கர்நாடக அரசால் கட்ட இயலாது என தெரிவித்துள்ளார். அணை கட்டுவதற்கு வனத்துறை நிலங்களை கணக்கெடுக்கும் பணிகளுக்காக 29 அதிகாரிகளை பணியமர்த்துவது உச்சநீதிமன்றத் தீர்ப்பையும், கூட்டாட்சித் தத்துவத்தையும் அவமதிக்கும் செயல் என தெரிவித்துள்ளார். மேகதாது அணைக்கான வரைவு திட்ட அறிக்கையை தயாரிக்க அளித்த அனுமதியை மத்திய அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார். கர்நாடக அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று கோரி, உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு உடனடியாக வழக்கு தொடர வேண்டும் என்றும் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்