மனைவி இறந்த 3 மாதத்தில்..75 வயது தந்தைக்கு டும் டும் செய்து வைத்த மகள்கள் - மனைவியின் அக்காவை மணந்த தாத்தா

x

75 வயதில் மனைவி இறந்த மூன்றே மாதத்தில் 64 வயது பெண்ணை குடும்ப உறுப்பினர்களே ஒன்று சேர்ந்து திருமணம் செய்து வைத்த நிகழ்வு கர்நாடக மாநிலத்தில் அரங்கேறியுள்ளது‌.கர்நாடக மாநிலம் ஹூப்ளி நகரில் வசித்து வரும் டி.கே.சவுகான் எனும் தொழில் அதிபருக்கு நான்கு மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளார்.

இவர் தமது குடும்ப உறுப்பினர்களுடன் ஒரே வீட்டில் வசித்து வருகிறார். குடும்பத்தை முதன்மையான சொத்தாக கருதும் சவுகானின் 63 வயதான மனைவி சாரதா பாய், கடந்த மூன்று மாதங்களுக்கு முன் மாரடைப்பால் உயிரிழந்தார். இதனால் மனம் உடைந்து இருந்த சவுகானை நன்றாக கவனித்து கொள்ள, உடனடியாக இரண்டாவது திருமணம் செய்து வைக்க அவரது மகள்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் முடிவு செய்தனர். இதனிடையே சாரதா பாய்யின் மூத்த சகோதரி அனுஸ்யா திருமணம் செய்து கொள்ளாமல் தனியாக வாழ்ந்து வந்துள்ளார். இதனை பார்த்த குடும்ப உறுப்பினர்கள், கடந்த 16 ஆம் தேதி இருவருக்கும் மணம் முடித்து வைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்