"அரெஸ்ட் பண்றதா இருந்தாலும் இப்படியா?"...ஒரு நொடி கதிகலங்கவிட்ட போலீசார் - பதறிப்போன மக்கள்.. அதிர்ச்சி காட்சிகள்

x

கன்னியாகுமரி மாவட்டம் நடக்காவு சந்திப்பு அருகே, உணவகத்தில் நின்றிருந்த இளைஞரை, குண்டுகட்டாக போலீசார் தனியார் காரில் கடத்திச் சென்ற சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.கன்னியாகுமரி மாவட்டம் நடைக்காவு அருகே பெரியவிளை பகுதியை சேர்ந்த லிஜின் என்பவர், அந்தப் பகுதியில் உள்ள உணவகத்தில், உணவு ஆர்டர் செய்துள்ளார். அப்போது அங்கு காரில் வந்த நபர்கள், லிஜினை குண்டுகட்டாக தூக்கி கடத்திச் சென்றனர். இந்த சம்பவம் குறித்து பொதுமக்கள் தகவல் அளிக்கவே, அங்கு வந்த போலீசார், சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். பின்னர் கடத்திச் செல்லப்பட்ட வாகனத்தின் பதிவெண்ணை கொண்டு நடத்திய விசாரணையில், அந்த காரில் வந்தவர்கள் சென்னை சைபர் க்ரைம் போலீசார் என்றும், பணம் கடத்தல் வழக்கு சம்பந்தமாக லிஜினை பிடித்துச் சென்றதாகவும் தெரிவித்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்