அமைச்சர் வீட்டின் அருகே தீப்பற்றி எரிந்த கார் - கன்னியாகுமரியில் பரபரப்பு

x

அமைச்சர் வீட்டின் அருகே தீப்பற்றி எரிந்த கார் - கன்னியாகுமரியில் பரபரப்பு

கன்னியாகுமரி மாவட்டத்தில், சாலையில் சென்று கொண்டிருந்த கார் தீப்பிடித்து எரிந்த நிலையில், அமைச்சர் மனோ தங்கராஜ் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தார். குமரி மாவட்டம், பாலூர் சந்திப்பு பகுதியில் அமைச்சர் மனோ தங்கராஜ் வீடு அமைந்துள்ளது. இந்நிலையில், ஆசீம் என்பவர் இப்பகுதியில் கார் ஓட்டி வந்து கொண்டிருந்த போது, காரின் முன்புறத்திலிருந்து புகை வெளியேறியுள்ளது. உடனடியாக ஓட்டுநர் காரை நிறுத்திய சில நிமிடங்களில் கார் தீப்பற்றி எரிந்தது. அமைச்சர் அளித்த தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் போராடி தீயை அணைத்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.


Next Story

மேலும் செய்திகள்