வேட்டி சேலையில் 'மாஸ்'....பொங்கல் செய்வதில் 'கிளாஸ்' - வெளிநாட்டவரின் பொங்கல் கொண்டாட்டம்

x

கன்னியாகுமரியில் தமிழர் மரபுடன் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் பொங்கல் கொண்டாடி மகிழ்ந்தனர். சுற்றுலா பயணிகள் தமிழர் திருநாளைத் தெரிந்து கொள்ளும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் சுற்றுலாத் துறை சார்பில், பொங்கல் பண்டிகை கொண்டாடப்படும். அந்த வகையில், கன்னியாகுமரி அருகே சந்தையடி என்னும் ஊரில் இந்த ஆண்டிற்கான பொங்கல் கொண்டாட்டம் நடைபெற்ற நிலையில், ஆட்சியர் அரவிந்த் குடும்பத்துடன் பங்கேற்று பொங்கல் வைத்து மகிழ்ந்தார்... நெதர்லாந்து, ஜெர்மனி, பிரான்ஸ் உட்பட பல்வேறு நாடுகளை சேர்ந்த ஏராளமான வெளிநாட்டினர் இவ்விழாவில் கலந்து கொண்டு தாங்களும் பொங்கல் வைத்து மகிழ்ந்தனர்.


Next Story

மேலும் செய்திகள்