145 நாட்களுக்கு பிறகு திறக்கப்படும் கனியாமூர் பள்ளி | Kallakurichi | Kallakurichi School

x

கள்ளக்குறிச்சியில் பள்ளி மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் உயிரிழந்ததாக ஜூலை 13ம்தேதி தகவல் வெளியாகியது. மாணவி இறப்பு குறித்து, பள்ளி தரப்பு சரியான விளக்கம் அளிக்கவில்லை எனக்கூறி, ஜூலை 13 முதல் ஸ்ரீமதியின் உறவினர்கள் தொடர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஜூலை 16ஆம் தேதி வெளியான ஸ்ரீமதியின் பிரேத பரிசோதனை அறிக்கையில், உடலில் காயங்கள் இருப்பதாக தகவல் வெளியாகியது. இதனை தொடர்ந்து, ஜூலை 17ஆம் தேதி கனியாமூர் பள்ளி வளாகத்தை சுற்றிலும் கடும் போராட்டம் மூண்டது. பேருந்துகள் எரிக்கப்பட்டன, அதனை தொடர்ந்து தடியடி நடத்தப்பட்டது. ஜூலை 17ஆம் தேதியில் இருந்து ஒரு மாதத்திற்கு கனியாமூர் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஜூலை 17ஆம் தேதி 2 ஆசியரியர்கள் மற்றும் பள்ளி தாளாளர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். ஜூலை 17ல் கலவரத்தில் ஈடுபட்ட 200 பேர் கைது செய்யப்பட்டனர். கலவரம் தொடர்பாக இதுவரை 430க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஜூலை 19ல் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் , மாவட்ட எஸ்.பி, மற்றும் டி.எஸ்.பி ஆகியோர் பணியிடமாற்றம் செய்யப்பட்டனர். ஜூலை 23ம் தேதி உயிர் நீதிமன்றத்தின் உத்தரவுபடி, ஸ்ரீமதியின் உடலை பெற்று, ஜூலை 23ல் இறுதி சடங்கு நடைபெற்றது.

இதனை தொடர்ந்து கனியாமூர் பள்ளி மாணவர்களுக்கான ஆன்லைன் கல்வி ஜூலை 27 முதல் தொடங்கப்பட்டது,.

ஆகஸ்ட் 29ஆம் தேதி தனியார் பள்ளி தாளாளர், செயலாளர், முதல்வர் உள்பட 5 பேருக்கு சென்னை உயர் நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின்படி, கனியாமூர் தனியார் பள்ளியின் 3வது தளம் மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன்குமார் முன்னிலையில் பூட்டி சீல் வைக்கப்பட்டது. கனியாமூர் பள்ளி மறுசீரமைப்பு பணிகள் செப்டம்பர் 19ல் தொடங்கியது. இந்நிலையில், 145 நாட்களுக்கு பிறகு பள்ளி திறப்பட்டு 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான நேரடி வகுப்புகள் தொடங்கவுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்