"காசு தான் இல்ல.. இதையாவது சாப்டுவோம்" - திருடர்கள் தீனி பண்டாரமாக மாறிய பரிதாபம்

x

திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில், மளிகை கடையில் புகுந்த முகமூடி கொள்ளையர்கள், பணம் இல்லாததால் திண்பண்டங்களை எடுத்துச் சென்ற சம்பவத்தின் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

காங்கேயம் - சென்னிமலை சாலையில் உள்ள ஆலம்பாடி பேருந்து நிறுத்தம் பகுதியில் உள்ள மனோகரன் என்பவரது மளிகை கடையின் மேற்கூரையை பிரித்து முகமூடி அணிந்த இரு கொள்ளையர்கள் உள்ளே சென்றனர்.

ஆனால், பணம் ஏதும் கிடைக்காததால் விரக்தி அடைந்த அவர்கள், கடையில் இருந்த தின்பண்டங்களை எடுத்துச் சென்றனர். கொள்ளையில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்