வாகனத்தை சோதனை செய்த பெண் அதிகாரியை லாரி ஏற்றிக் கொல்ல முயன்ற ஓட்டுனர்கள் - திருப்பூரில் பரபரப்பு சம்பவம்

x

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே, பெண் கனிமவளத்துறை ஆய்வாளரை, லாரி ஏற்றிக் கொல்ல முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

புவியியல் மற்றும் கனிமவளத் துறையில், திருப்பூர் மாவட்டம் மற்றும் சேலம் மண்டல பறக்கும் படை ஆய்வாளராக பணிபுரிந்து வருபவர் பிரியா.

ஊதியூர் பகுதியில் கிராவல் மண் கடத்தல் தொடர்பாக வந்த தகவலின் அடிப்படையில், புங்கந்துறை கிராமத்தில் பிரியா ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, கிராவல் மண் ஏற்றி வந்த டிப்பர் லாரியை, நிறுத்தி சோதனை செய்தார்.

உரிய ஆணவங்கள் இன்றி 3 யூனிட் கிராவல் மண் இருந்ததால், காவல் நிலையத்திற்கு வாகனத்தை எடுத்து வருமாறு கூறியுள்ளார்.

ஆனால் அதற்கு மறுப்பு தெரிவித்து, வாகன ஓட்டுநர் ராசு மற்றும் ஜேசிபி ஆப்ரேட்டர் அன்பரசன் ஆகியோர், பிரியா மீது வண்டியை ஏற்றிக் கொல்ல முயற்சித்துள்ளனர்.

இதுகுறித்து காவல்நிலையத்தில் பிரியா அளித்த புகாரின் பேரில், தப்பியோடிய 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்