விபத்தில் சிக்கி நொறுங்கிய லாரி.. குடம் குடமாக டீசலை பிடித்து சென்ற தீயணைப்புத் துறையினர் -வீடியோ வெளியாகி பரபரப்பு

x
  • காங்கேயம் அருகே விபத்தில் சிக்கிய வாகனத்தில் இருந்த டீசலை, தீயணைப்பு வீரர்கள் குடத்தில் பிடித்து தங்கள் வாகனத்தில் நிரப்பிக் கொண்டது, காண்போரை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.
  • காங்கேயம் அருகே நேரிட்ட சாலை விபத்தில் 3 பெண்கள் உள்பட 5 பேர் உயிரிழந்தனர். அங்கு மீட்பு பணிக்கு வந்த தீயணைப்புத் துறையினர், கவிழ்ந்து கிடந்த வேனில் இருந்து டீசல் டேங்கை திறந்து குடம் மற்றும் பக்கெட்டில் டீசலை பிடித்து, தங்கள் வாகனத்தில் நிரப்பிக் கொண்டனர்.
  • சுமார் 75 லிட்டர் டீசலை அவர்கள் நிரப்பியபோது, அருகில் இருந்த போலீசார் கண்டு கொள்ளவில்லை.
  • பொதுவாக விபத்து நிகழும் இடத்தில் பெண்களின் நகைகள் மாயமாகும் சம்பவங்கள் கேள்விப்பட்ட நிலையில், மீட்பு பணிக்கு வந்த இடத்தில் டீசலை தீயணைப்புத் துறையினர் எடுக்கும் வீடியோ வேகமாக பரவி வருகிறது.
  • இது குறித்து உயரதிகாரிகள் விசாரணை நடத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்