பழனியில் கந்த சஷ்டி திருவிழா தொடங்கியது | palani | thanthi tv

x

பழனியில் கந்த சஷ்டி திருவிழா காப்புகட்டுதலுடன் இன்று தொடங்கியது. அதைத் தொடர்ந்து, சூரியகிரகணத்தை முன்னிட்டு கோவில் நடை அடைக்கப்பட்டது. முருகப்பெருமானின் முக்கிய திருவிழாவான கந்த சஷ்டி திருவிழா காப்பு கட்டுதலுடன் இன்று தொடங்கியது. மலைக்கோவிலில் உச்சி காலபூஜை முடிந்தவுடன் மூலவருக்கு காப்பு கட்டப்பட்டது. தொடர்ந்து விநாயகர், சண்முகர், வள்ளி, தெய்வயானை உள்ளிட்டோருக்கு காப்பு கட்டப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. மாலை சூரிய கிரகணம் என்பதால், உச்சிகால பூஜை சற்று முன்னதாகவே நடத்தப்பட்டு, காப்புக்கட்டுதல் நிகழ்ச்சிக்குப் பிறகு கோவில் நடை சாத்தப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்