பேஸ்புக் நட்பால் நடந்த விபரீதம்... இளம்பெண்ணின் புகைப்படத்தை மார்ஃபிங் செய்து மிரட்டல் - சமூகவலைதள வாசிகளே உஷார்

x

தமிழ் சினிமா நடிகர் 'கனா தர்ஷனின்' புகைப்படம் மற்றும் அவரது பெயரில் போலி முகநூல் கணக்கை உருவாக்கி, காஞ்சிபுரத்தை சேர்ந்த பெண் ஒருவருக்கு நட்பு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

பின்னர் அந்தப் பெண்ணின் புகைப்படம் மற்றும் வீடியோக்களை பெற்ற நபர், அதனை ஆபாசமாக மார்பிங் செய்து, சமூக வலைதளங்களில் வெளியிடுவதாக மிரட்டியுள்ளார்.

அதன் மூலம் 2 லட்சம் ரூபாய் வரை அந்தப் பெண்ணிடம் இருந்து பணம் பறித்த நிலையில், மீண்டும் பணம் கேட்டு தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது.

இதனால் பாதிக்கப்பட்ட பெண், காஞ்சிபுரம் சைபர் க்ரைம் போலீசில் புகார் தெரிவித்தார்.

அதன் பேரில் போலீசார் விசாரணை செய்தபோது, ஈரோட்டைச் சேர்ந்த அலாவுதீன், வாகித் ஆகிய இரு சகோதரர்கள், சமூக வலைதளங்களில் நட்புடன் பழகி, பெண்களை மிரட்டி பணம் பறிக்கும் செயலில் ஈடுபட்டு வந்தது கண்டறியப்பட்டது.

பின்னர் இருவரையும் கைது செய்து, போலீசார் சிறையில் அடைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்