பணம் தர மறுத்த பல் மருத்துவர்...அரிவாளால் வெட்டிய பிரபல ரவுடி - விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி

பணம் தர மறுத்த பல் மருத்துவர் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம், திருமுடிவாக்கத்தில் பல் மருத்துவராக பணியாற்றி வருபவர் கவுதம். இவர் மருத்துவமனையில் இருந்த போது, சரித்திர பதிவேடு குற்றவாளியான கர்ணா என்ற கருணாகரன் மற்றும் 3 பேர் கவுதமை அரிவாளால் வெட்டி தப்பிச் சென்றனர். அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், போலீசார் விசாரணை மேற்கொண்டதில், மற்றோரு சரித்திர பதிவேடு குற்றவாளியான செந்தமிழ் செல்வன், பல் மருத்துவரை மிரட்டி 50 ஆயிரம் ரூபாய் கேட்டதாக தெரிகிறது. அவர், பணம் தர மறுக்கவே, அவர் மீது தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.

X

Thanthi TV
www.thanthitv.com