"நான் மாவட்ட ஆட்சியரின் சிறப்பு உதவியாளர்"... "அவசர உதவியாக 75,000 வேண்டும்.." - மோசடியில் ஈடுபட்ட மர்ம ஆசாமி

x
  • காஞ்சிபுரம் காந்தி சாலையில் உள்ள பட்டு சேலை விற்பனை கடை உரிமையாளர் கோபிநாத் என்பவருக்கு தொலைபேசி மூலம் பேசிய ஒரு நபர், தான் மாவட்ட ஆட்சியரின் சிறப்பு உதவியாளர் என கூறி, அவசர உதவியாக 75 ஆயிரம் ரூபாய் அனுப்புமாறு கூறி வங்கி கணக்கு எண்ணை தெரிவித்துள்ளார்.
  • சந்தேகமடைந்த பட்டு சேலை விற்பனை கடை உரிமையாளர் காஞ்சிபுரம் மாவட்ட எஸ்பியிடம் புகார் அளித்தார்.
  • அதன்பேரில் போனில் பேசியது கோவை மாவட்டம் நியுசித்தா புதூர் பகுதியை சேர்ந்த சந்தானம் என்பதை போலீசார் கண்டுபிடித்தனர்.
  • மற்றொரு வழக்கில் கைதாகி புதுக்கோட்டை சிறையில் இருந்த சந்தானத்தை மீண்டும் கைது செய்து போலீசார் காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர்.
  • பின்னர் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு அந்த நபரை மீண்டும் சிறையில் அடைத்தனர்.

Next Story

மேலும் செய்திகள்