ஒரே கோயில் 4 பெருமாள் தரிசனம்- திருமண தடை நீங்க... புத்திர பாக்கியம் கிடைக்க... ஊரகத்தான் பெருமாள் வழிபாடு

இந்த வாரம் உலகத்தையே அளந்த உலகளந்த பெருமாளாக... காட்சி தரும் காஞ்சிபுரம் ஊரகத்தான் உலகளந்த பெருமாள் கோயிலின் சிறப்புகளை..
ஒரே கோயில்  4 பெருமாள் தரிசனம்- திருமண தடை நீங்க... புத்திர பாக்கியம் கிடைக்க...  ஊரகத்தான் பெருமாள் வழிபாடு
x


இந்த வாரம் உலகத்தையே அளந்த உலகளந்த பெருமாளாக... காட்சி தரும் காஞ்சிபுரம் ஊரகத்தான் உலகளந்த பெருமாள் கோயிலின் சிறப்புகளை இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.


வைண பக்தர்கள்... தங்கள் வாழ்நாளில் ஒரு முறையாவது 108 வைணவ திருத்தலங்களாக போற்றப்படும் திவ்ய தேசங்களுக்கு சென்று, பெருமாளின் ஆசி பெற விருப்பம் கொள்வதுண்டு. பன்னிரு ஆழ்வார்களால் மங்களாசாசம் பெற்ற இடங்கள் தான் இந்த திவ்ய தேசங்கள்.. அப்படி இருக்கையில், இந்த ஒரே கோயிலுக்கு சென்றால் போதும் 4 திவ்ய தேசங்களை தரிசித்துவிடலாம்.

108 திவ்ய தேசங்களில் 22 திவ்ய தேசங்களை கொண்ட கோயில் நகரமான காஞ்சிபுரத்தில் உள்ள உலகளந்த பெருமாள் கோயிலில் பல ரூபங்களாக காட்சி அளிக்கும் பெருமாள்களின் திரு உருவங்கள் வேறெங்கும் காணக்கிடைக்காத அபூர்வம்.

ஆதிசேஷன் வடிவமாக தெற்கு முக மண்டலமாக சேவை சாத்துபவராக திகழ்பவர்... 'ஊரகத்தான் பெருமாள்...'

ஆதிசேஷன் மீது வடக்கு நோக்கி அமர்ந்து

காட்சி தருபவர்... 'காரகத்து பெருமாள்...'

தெற்கு நோக்கி வீற்றிருப்பவர், 'நீரகத்து பெருமாள்...'

ஸ்ரீதேவி, பூதேவியருடன், நின்ற கோலத்தில் வடக்கு நோக்கி காட்சி தருபவர், 'கார்வனப் பெருமாள்...'

ஆணவத்துடன் அறவழியில் நடக்காமல் ஆட்சி புரிந்து வந்த மகாபலி சக்கரவர்த்தியை அழிக்க வாமன அவதாரம் எடுத்த பெருமாள்... தனது மூன்று அடியில், முதல் அடியில் உலகத்தையும்... இரண்டாவது அடியில் விண்ணையும்... மூன்றாவது அடியில் மகாபலி சக்கரவர்த்தியின் தலையின் மீதும் கால் வைத்து.. வதம் செய்தார் அல்லவா? அந்த பெருமாளின் திரிவிக்ரம கோலமே இந்த உலகளந்த பெருமாள்.

மேற்கு நோக்கிய திருமுக மண்டலத்துடன் திரி விக்ரம அவதார வடிவத்தில் நின்ற திருக்கோலத்தில் இன்னும் ஒரு அடிக்கு இடம் எங்கே? என கேட்பது போல் காட்சி கொடுக்கும் பெருமாளை தரிசித்தால் சகலமும் கிட்டும் என்பது ஐதீகம்

பொதுவாக பெருமாளுக்கு உகந்த தினம் சனிக்கிழமையாக அனுசரிக்கப்படும் நிலையில், இங்கு வெள்ளி மற்றும் ஞாயிறு அன்று பெருமாளுக்கு செய்யப்படும் சிறப்பு திருமஞ்சனம், பால் பாயாசம் நைவேத்யம் அதி விஷேசம்.

திருமண தடை நீங்க... புத்திர பாக்கியம் கிடைக்க... ராகு கேது தோஷம் விலக... இத்தகைய வழிபாட்டில் மக்கள் ஈடுபடு கிறார்கள்.

இந்த தலத்தில் மகாலட்சுமி ஸ்ரீ ஆரண வள்ளி தாயார் என்ற பெயரில் காட்சியளிக்கிறார். ஆண்டாளுக்கும் இங்கு தனி சன்னதி உள்ள நிலையில், பெருமாள் கோயிலுக்கு எதிரே நான்கு கரங்களுடன் கூடிய சதுர் புஜ ஆஞ்சநேயருக்கு சனிக்கிழமைகளிலும், மூல நட்சத்திரத்தின் போதும் செய்யப்படும் வழிபாடு கூடுதல் விஷேசம்.

கார்த்திகை... மார்கழி... புரட்டாசி மாத வழிபாடுகளுடன் சேர்த்து திருவோணத்தை ஒட்டி நடக்கும் பூஜைகள் கூடுதல் சிறப்பு.

காலை 7 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் கோயில் திறந்திருக் கும். காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து 250 மீட்டர் தொலைவிலும்... ரயில் நிலையத்தில் இருந்து 1 புள்ளி 5 கிலோ மீட்டர் தொலைவிலும்... காஞ்சி காமாட்சி அம்மன் கோயிலுக்கு மிக அருகாமையிலும் அமைந்துள்ளது, இந்த கோயில்.

நாமும் வாழ்வில் மென்மேலும் பல ஏற்றங்களை பெற

உலகளந்த பெருமாளை வணங்கி ஆசி பெறுவோம்.


Next Story

மேலும் செய்திகள்