காமராஜர் பிறந்தநாள்.. - பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு

x

ஜூலை 15-ம் தேதி காமராஜர் பிறந்ததினம், கல்வி வளர்ச்சி நாளாக ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. அதன்படி, இன்று காமராஜர் பிறந்த நாள் விழா பள்ளிகளில் கொண்டாடப்பட வேண்டும் என பள்ளி கல்வி இயக்குனர் அறிவொளி அறிவுறுத்தியுள்ளார். மாணவர்கள் புத்தாடை அணிந்து, காமராஜர் படத்திற்கு மலர்களை தூவி மரியாதை செலுத்த வேண்டும் என்றும், பேச்சுப்போட்டி, கட்டுரை போட்டி உள்ளிட்டவற்றை நடத்தி, மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். சனிக்கிழமையான நாளை அனைத்து பள்ளிகளுக்கும் வேலைநாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நாளை காலை, சென்னை நங்கநல்லூரில் உள்ள நேரு அரசினர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறும் காமராஜர் பிறந்த தின விழாவில் பங்கேற்க உள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்