"திமுக கூட்டணியில் கமல்.. தலைமை அழுத்தம் கொடுக்கும்" - அய்யநாதன், மூத்த பத்திரிகையாளர்

"திமுக கூட்டணியில் கமல்.. தலைமை அழுத்தம் கொடுக்கும்" - அய்யநாதன், மூத்த பத்திரிகையாளர்
Published on

அரசியல் களத்தையே மாற்றியமைக்கும் விதமாக ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் அமைந்திருக்கிறது. 2024 மக்களவை தேர்தலுக்கான இது ஒரு முன்னோட்டமாக இருக்கும் என அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர். அந்த வகையில் திமுக கூட்டணியில் எந்தவித மாற்றமும் இல்லாமல் அப்படியே தொடர்கிறது. அனைத்து கட்சிகளும் ஒருமித்த கருத்துடன் மீண்டும் காங்கிரசே போட்டியிட சம்மதித்துள்ளன.

இச்சூழலில் புதிய தகவலாக கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி காங்கிரசுக்கு ஆதரவளிக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. இன்று கமல்ஹாசனின் தலைமையில் மக்கள் நீதி மய்யம் கட்சி நிர்வாகிகளுடன் முக்கிய ஆலோசனை நடைபெறவுள்ளது. இக்கூட்டத்திற்குப் பின் தனித்து போட்டியா, வேறு கட்சிக்கு ஆதரவா, பாமக போல் புறக்கணிப்பா என்ற முடிவை கமல் அறிவிப்பார் என சொல்லப்படுகிறது. இதுதொடர்பாக மூத்த பத்திரிகையாளர் அய்யநாதன் தனது கருத்தைத் தெரிவித்துள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com