சூப்பர்ஸ்டாரின் பழைய ரூட்டில் உலகநாயகன்... நினைத்து பார்க்க முடியா 'கோடியில்' சம்பளம்..! - கமலுக்கு இதுதான் முதல் முறை

x

நடிகர் பிரபாஸின் 'ப்ராஜெக்ட் கே' என்ற பான் இந்தியா படத்தில் முழு நீள வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் நடிகர் கமல், வில்லனாக நடிக்க நடிகர் கமலுக்கு பேசப்பட்டிருக்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா?... இதுகுறித்து இந்த சினிமா தொகுப்பில் பார்க்கலாம்.

பாகுபலிக்கு பிறகு பிரபாஸ் என்றாலே பிரம்மாண்டம் என்று ஆகிவிட்டது.

சுமார் 500 கோடி ரூபாய் பட்ஜெட்டில் பிரபாஸின் அடுத்த படமான 'ப்ராஜெக்ட் கே' உலக நாயகன் கமல் வில்லனாக மிரட்ட இருப்பதாக தகவல் வெளிவந்த வண்ணம் உள்ளன.

தற்போது இந்தியன் 2 படப்பிடிப்பில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் கமல், இந்தியன் 2 படப்பிடிப்பை முடித்து கையோடு, ஆகஸ்ட் மாதம் 'ப்ராஜெக்ட் கே' படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என தெரிகிறது.

'ப்ராஜெக்ட் கே' படத்தில் தனது போஷனை முடித்துக் கொள்ள அவர் 20 நாள் கால் சீட் கொடுத்திருப்பதாக லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகியுள்ள நிலையில், வில்லனாக நடிக்க கமலுக்கு பேசப்பட்டிருக்கும் சம்பளம் தற்போது சமூக வலைதளங்களில் விவாதம் ஆகியுள்ளது.

இதற்கு முன்பு ஆளவந்தான்... தசாவதாரம் ஆகிய படங்களில் வில்லனாக நடித்திருந்தார்...ஆனால் அந்த படத்தில் கதாநாயகன் பாத்திரத்தையும் அவரே ஏற்றிருந்தார். ஆனால் முதல் முறையாக 'ப்ராஜெக்ட் கே' படத்தில் வில்லனாக மட்டுமே மிரட்ட போகிறார் கமல்.

'ப்ராஜெக்ட் கே' படத்தில் வில்லனாக நடிக்க சம்பளமாக

150 கோடி ரூபாய் கேட்டதாக சினிமா வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

பான் இந்தியா திரைப்படமாக தயாராகி வரும் ப்ராஜெக்ட் கே திரைப்படத்தில் தென்னிந்திய பிரபலங்களான பிரபாஸ் மற்றும் கமலுடன் பாலிவுட் பிரபலங்களான தீபிகா படுகோன், திஷா பதானி மற்றும் அமிதாப்பச்சன் ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர்.

இயக்குனர் நாக் அஸ்வினின் இயக்கத்தில் வெளியாக இருக்கும் இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.

சினிமாவின் எல்லா துறைகளிலும் புதுமையை புகுத்தி வரும் கமல், முதல் முறையாக முழு நீள வில்லன் அவதாரம் எடுக்க இருப்பது அவரது ரசிகர் மத்தியில் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.

இன்னொரு புறம் பாகுபலிக்கு பிறகு 'ராதே ஷ்யாம் ' ... 'சாஹோ' என அடுத்தடுத்து தொடர் தோல்விகளால் துவண்டு போய் இருக்கும் பிரபாஸூக்கு தற்போது மிகப்பெரிய வெற்றி தேவைப்படுகிறது.

வெளியாவதற்கு முன்பே பல விமர்சனங்களை எதிர்கொண்ட பிரபாஸின் ஆதிபுருஷ் திரைப்படம் நாளை ரிலீஸாக உள்ளது. மீண்டும் வெற்றி நாயகனாக பிரபாஸ் ஜொலிக்க 'ஆதிபுருஷ்' கை கொடுக்குமா? என்பது நாளை தெரிந்து விடும்.


Next Story

மேலும் செய்திகள்