ராகுல் காந்தியுடன் கை கோர்க்கும் கமல்ஹாசன் | rahul gandhi | kamal haasan

x

ராகுல் காந்தியுடன் நடைபயணத்தில் பங்கேற்பதற்காக, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமலஹாசன் நாளை இரவு டெல்லி செல்ல உள்ளார். ராகுல்காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரை 100 நாட்களை தாண்டி நடைபெற்று வருகிறது. இந்த இந்திய ஒற்றுமை யாத்திரையில் பிரபலங்கள் பங்கேற்று வரும் நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவரும், பிரபல நடிகருமான கமலஹாசன், டெல்லியில் வருகிற 24ம் தேதி இந்த யாத்திரையில் ராகுல் காந்தியுடன் கைகோர்க்க உள்ளார். இதற்காக நாளை இரவு கமலஹாசன் விமானம் மூலம் டெல்லி செல்ல உள்ள நிலையில், மநீம கட்சி நிர்வாகிகள், மற்றும் தொண்டர்களும் இதில் கலந்து கொள்ள படையெடுத்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்