புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவில் கலந்து கொள்ள கமல்ஹாசன் முடிவு - ஆனால்...

x

புதிய பாராளுமன்ற திறப்பு விழாவில் கலந்து கொள்ள மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் முடிவு செய்துள்ளார். இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், குடியரசு தலைவர் ஏன் கலந்து கொள்ளக் கூடாது என்பதை நாட்டு மக்களுக்கு சொல்ல வேண்டும் என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் வலியுறுத்தியுள்ளார்.

ஜனநாயகத்தை தாம் நம்புவதாகவும், நிகழ்வை புறக்கணித்துள்ள எதிர்க்கட்சிகள் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என கமல்ஹாசன் குறிப்பிட்டுள்ளார். புதிய பாராளுமன்ற திறப்பு விழா நாட்டின் கொண்டாட்டத்தின் தருணம் இந்த வரலாற்று சாதனைக்காக மத்திய அரசை வாழ்த்துகிறேன்..தேசிய நலன் கருதி புதிய பாராளுமன்ற திறப்பு விழாவை கொண்டாட முடிவு செய்துள்ளதாகவும், எதிர்க்கட்சிகளுக்கு ஏதேனும் கருத்து வேறுபாடுகள் இருந்தால் மக்கள் மன்றத்திலும், புதிய நாடாளுமன்றத்திலும் எழுப்பலாம் எனவும் கமல்ஹாசன் யோசனை தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்