வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்...மக்கள் வெள்ளத்தில் வைகை ஆறு - விழாக்கோலம் கண்ட மதுரை மாநகரம்

x

உலகப் புகழ் பெற்ற மதுரை சித்திரை திருவிழாவின் முத்திரை பதிக்கும் நிகழ்வான வைகை ஆற்றில் கள்ளழகர் எழுந்தருளும் நிகழ்வு இன்று அதிகாலை 5.45 மணி அளவில் சீரும் சிறப்புடன் நடைபெற்றது.இந்தாண்டிற்கான மதுரை சித்திரை திருவிழா கடந்த 1-ஆம் தேதி தொடங்கிய நிலையில், 4-ஆவது நிகழ்வாக, தங்க பல்லக்கில் எழுந்தருளிய கள்ளழகரை வரவேற்கும் வகையில் மூன்றுமாவடி பகுதியில், எதிர்சேவை நிகழ்ச்சி நடைபெற்றது. வழிநெடுகிலும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கைகளில் சர்க்கரை தீபத்தை ஏந்தி கள்ளழகரை வரவேற்றனர்.

அதனைத் தொடர்ந்து இன்று அதிகாலை 2.30 மணிக்கு ஸ்ரீவில்லிபுத்துர் ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலையை அணிந்தபடி, வெட்டிவேர் மற்றும் ஆயிரம்பொன் சப்பரத்திலும் கள்ளழகர் எழுந்தருளினார்.இதையடுத்து, தல்லாகுளம் கருப்பணசாமி கோவிலில் இருந்து தங்கக்குதிரை வாகனத்தில் வைகை ஆறு நோக்கி கள்ளழகர் புறப்பட்டார்.அவரை, ஆழ்வார்புரம் வைகையாற்று பகுதியில், வெள்ளிக்குதிரையில் வீரராகவ பெருமாள் வரவேற்றார். அதன் பிறகு, வைகையாற்றில் இன்று அதிகாலை 5.45 மணி அளவில், கள்ளழகர் எழுந்தருளினார்.


Next Story

மேலும் செய்திகள்