தண்ணீருக்கு ஏங்கும் கள்ளக்குறிச்சி மக்கள்.. திமுக எம்.எல்.ஏ.வை முற்றுகையிட்டனர்

x

கள்ளக்குறிச்சி அருகே, ஓராண்டாக குடிநீர் வசதி ஏற்படுத்தி தரவில்லை எனக் கூறி, சட்டமன்ற உறுப்பினரை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பானது. கல்வராயன் மலை அடிவாரத்தில் உள்ள பரிகம் கிராமத்தில், சங்கராபுரம் எம்.எல்.ஏ. உதயசூரியன் தலைமையில், திறந்த வெளியில் அரசின் சாதனை விளக்க பிரச்சாரம் நடைபெற்றது. அப்போது, ஓராண்டாக குடிநீர் வசதி இல்லை எனக் கூறி, எம்.எல்.ஏ. உதயசூரியனை முற்றுகையிட்ட அப்பகுதி மக்கள், தங்கள் கோரிக்கைகளை முன்வைத்தனர்...


Next Story

மேலும் செய்திகள்