கள்ளக்குறிச்சியில் பரபரப்பு சம்பவம் | ஒரே நேரத்தில் 25 அதிகாரிகளிடம் விசாரணை

கள்ளக்குறிச்சியில் பரபரப்பு சம்பவம் | ஒரே நேரத்தில் 25 அதிகாரிகளிடம் விசாரணை
x

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் கடந்த பத்தாண்டு ஆண்டுகளில் கிராமப்புறங்களில் நடைபெற்ற வேலை திட்டங்களில் பல கோடி ஊழல் நடந்திருப்பதாக புகார் எழுந்தது. இதனை விசாரணை நடத்த முன்னாள் ஊராட்சி தலைவர் சீனுவாசன் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் ஏற்கனவே பணிபுரிந்த 7 வட்டார வளர்ச்சி அலுவலர் உட்பட, உதவி பொறியாளர், பணி மேற்பார்வையாளர் என 40 அதிகாரிகள் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டனர். அவர்களிடம், கள்ளக்குறிச்சி ஊராட்சி உதவி இயக்குனர் அன்னபூரணி விசாரணை நடத்தினார். ஒரே நேரத்தில் 40 அதிகாரிகள் விசாரணைக்கு அழைக்கப்பட்ட நிலையில், 25 அதிகாரிகளிடம் விசாரணை நடைபெற்றது. மீதம் உள்ள 15 அதிகாரிகளிடம் மற்றொரு நாளில் விசாரணை நடைபெறும் என விசாரணை அதிகாரி தெரிவித்துள்ளார். பல்வேறு அதிகாரிகளிடம் ஒரே நேரத்தில் விசாரணை செய்த சம்பவம் சங்கராபுரம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்