வீட்டில் மகளுடன் நெருக்கமாக இருந்த காதலன் ..."எப்ப கல்யாணம் வச்சிக்கலாம்.." என கேட்ட - காதலி பெற்றோருக்கு நேர்ந்த சம்பவம்

x

கள்ளக்குறிச்சி அருகே, பெண்ணை காதலிப்பதாகக் கூறி நெருக்கமாக இருந்துவிட்டு, திருமணம் செய்ய மறுத்ததுடன், பெண்ணின் வீட்டாருக்கு கொலை மிரட்டல் விடுத்த இளைஞரின் குடும்பத்தார் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.கள்ளக்குறிச்சி அருகே காரனுர் கிராமத்தைச் சேர்ந்த பட்டதாரி இளம்பெண்ணும், சங்கராபுரத்தைச் சேர்ந்த மணி என்ற இளைஞரும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். காதலியின் வீட்டிற்கு அடிக்கடி வந்த மணி, அவரிடம் திருமணம் செய்வதாக ஆசைவார்த்தைகள் கூறி, நெருக்கமாக இருந்து வந்ததாக கூறப்படுகிறது. பின்னர், பெண்ணின் குடும்பத்தார், மணியின் வீட்டிற்கு சென்று, எப்போது திருமணம் வைத்துக் கொள்ளலாம் எனக் கேட்டுள்ளனர். அப்போது, அங்கிருந்த மணியின் குடும்பத்தார், திருமண பேச்சை எடுத்தால் கொலை செய்துவிடுவோம் என மிரட்டியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பான புகாரின் பேரில், மணியை கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர். பின்னர், ராமுவின் தாய் சாந்தா உள்ளிட்ட உறவினர்கள் 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்