கள்ளக்குறிச்சி சம்பவம் - 3 பேர் கைது | kallakurichi | thanthi tv

கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் பள்ளி கலவரத்தின்போது, போலீசாரின் வாகனம் மற்றும் பள்ளியில் இருந்த பொருட்களை சேதப்படுத்தியதாக மேலும் 3 பேரை போலீசார் கைது செய்தனர். கடந்த ஜூலை 17ஆம் தேதி நடைபெற்ற போராட்டம், கலவரமாக மாறியதை அடுத்து, போலீசாரின் வாகனம் மற்றும் பள்ளி பேருந்துகள் உள்ளிட்டவை அடித்து நொறுக்கியதுடன், தீ வைத்தும் கொளுத்தப்பட்டன. இந்த சம்பவத்தில் 425க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் 3 பேரை போலீசார் கைது செய்தனர். கைதான நாகரத்தினம், ராஜிவ்காந்தி மற்றும் தினேஷ் ஆகிய பேர் நீதிபதி முன் ஆஜர்படுத்திய பின், சிறையில் அடைக்கப்பட்டனர்.

X

Thanthi TV
www.thanthitv.com