"உயிரோடு இருக்கும்போதே இறந்ததாக பதிவு"... மோசடியில் ஈடுபட்ட அதிகாரிகள் - "தமிழக அரசு நடவடிக்கை எடுக்குமா?"

x
  • சங்கராபுரம் அடுத்த வடபென்பரப்பி எல்லைக்கு உட்பட்ட சார்பதிவாளர் அலுவலகத்தில், தொடர்ந்து முறைகேடுகள் நடந்து வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
  • அந்த வகையில், இளையாங்கண்ணி கிராமத்தை சேர்ந்த குழந்தை இயேசு என்ற முதியவர் உயிரோடு இருக்கும் போதே, அவர் இறந்ததாக ஆவணங்களை வைத்து பத்திரப்பதிவு செய்துள்ளதக கூறப்படுகிறது.
  • இதனால் ஆத்திரம் அடைந்த முதியவர், சார் பதிவாளர்கள் அலுவலகத்தில் இதுகுறித்து கேட்டபோது, அதிகாரிகள் உரிய பதில் தரவில்லை என சொல்லப்படுகிறது.
  • அதுமட்டுமல்லாமல், 10க்கும் மேற்பட்ட கிராமங்களில், போலியான ஆவணங்களை வைத்து பத்திரப்பதிவு செய்ததாக அந்தப் பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
  • இந்த மோசடியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் மீது, தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்