டாக்டர் சிவந்தி ஆதித்தனார் கல்லூரியில் கபடி போட்டி - சிறப்பாக விளையாடி அசத்திய மாணவிகள்

x

திருச்செந்தூர் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் உடற்கல்வியியல் கல்லூரியில் பல்கலைக்கழக கல்லூரிகளுக்கு இடையிலான கபடி, கையுந்து பந்து போட்டிகள் சிறப்பாக நடைபெற்றன

பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் உள்விளையாட்டு அரங்கில் இரண்டு நாட்கள் நடைபெற்ற இப்போட்டியில்,

பெண்கள் பிரிவில் தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகத்தில் அங்கம் வகிக்கும், 10 அணிகள் பங்கு பெற்றன. இந்த கபடி போட்டியில் முதல் இடத்திற்கான கோப்பையினை புதுக்கோட்டை அன்னை தெரசா உடற்கல்வியியல் கல்லூரி தட்டி சென்றது. இதில், சிறப்பு விருந்தினராக சென்னை தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைகழக துணை விளையாட்டு ஒருங்கிணைப்பாளர் வேல் குமார் பங்கேற்று, வெற்றி பெற்ற அணிகளுக்கு கோப்பை மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்.


Next Story

மேலும் செய்திகள்