மூன்றே வருடங்கள் தான்..வரப்போகும் இ - ப்ளையிங் டாக்ஸி..சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி தகவல்

x

செயற்கை வைரம் தயாரிக்கும் திட்டத்திற்காக முதற்கட்ட ஆராய்ச்சி தொடங்கப்பட்டுள்ளதாகவும் இத்திட்டத்தின் முதற்கட்ட ஆராய்ச்சி முடிவுகள் 18 -24 மாதங்களுக்குள் தெரிவிக்கப்படும் எனவும் ஐஐடி இயக்குநர் காமகோடி தெரிவித்துள்ளார்.

சென்னை கிண்டியில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழக வளாகத்தில் இன்ஸ்டிட்யூட் ஆஃப் எமினன்ஸ் திட்டத்தின் ஒரு பகுதியாக 15 சிறப்பு ஆராய்ச்சி மையங்கள் அறிமுகப்படுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஐஐடி சென்னையின் இயக்குனர் காமகோடி, கடந்த 5 வருடங்களில் ஐஐடியில் ஆராய்ச்சி மேம்பாட்டிற்காக ரூ.1000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றார். பேராசிரியர் சத்யா சக்கரவர்த்தியின் E plane ஸ்டார்ட் ஆப் மூலம் வடிவமைக்கப்பட்ட ஈ ப்ளையிங் டாக்ஸி வடிவமைப்புக்கு ஒப்புதல்கள் பெறப்பட்டதாக குறிப்பிட்டார். அதனோடு மனிதர்கள் பாதுகாப்பாக பயணிப்பதற்கும் ஒப்புதல்களும் பெற வேண்டியுள்ளதால் வணிகரீதியான பயன்பாட்டிற்கு வர மூன்று வருடங்களாவது ஆகும் என்றார். செயற்கை வைரம் தயாரிக்கும் திட்டத்திற்காக 249 கோடி ரூபாய் மத்திய அரசு ஒதுக்கியுள்ளது என அவர் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்