நடிகர் ஜூனியர் என்.டி.ஆரை சூழ்ந்த ரசிகர்கள் - ஆஸ்கர் விருது பற்றி சொன்ன கருத்து

x
  • ஆஸ்கார் விருது விழாவில் பங்கேற்று இந்தியா திரும்பிய, ஆர்.ஆர்.ஆர். திரைப்படத்தில் நடித்த ஜூனியர் என்.டி.ஆருக்கு, ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்...'ஆர்.ஆர்.ஆர்.' படத்தில் இடம்பெற்ற 'நாட்டு நாட்டு' பாடல் ஆஸ்கர் விருது வென்றது , இந்திய திரைத்துறை ரசிகர்கள் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
  • இந்நிலையில், ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் பங்கேற்ற நடிகர் ஜூனியர் என்.டி.ஆர். தெலங்கானா திரும்பிய நிலையில், அவருக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
  • செய்தியாளர்களிடம் பேசிய அவர், இசையமைப்பாளர் கீரவாணி மற்றும் சந்திரபோஸ் ஆகியோர் விருது வென்ற தருணம், சிறந்த தருணம் எனவும், ஆர்.ஆர்.ஆர். படம் குறித்து பெருமை கொள்வதாகவும் தங்களை ஊக்குவித்த ஒவ்வொரு இந்தியருக்கும் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்