ஜூன் 3... WORLD BICYCLE DAY... உலக சைக்கிள் தினம் கொண்டாடுவது எப்படி?

x

அட டேல இன்னைக்கு நாம பாக்கப்போற டே என்னனா… WORLD BICYCLE DAY… அதாவது ஜூன் 3 ஆம் தேதி உலக மக்கள் இந்த டேய செலப்ரேட் பன்ன காத்துகிட்டு இருக்காங்கப்பா… அதுனால இந்த டேய எப்டி செலப்ரேட் பன்றதுனும் …. கூடவே இந்த டேய்ல இருக்க பல சுவாரஸ்யமான விசயங்களையும் தெரிஞ்சுக்கலாம் வாங்க…

சரி வழக்கம்போல இந்த டேய கொண்டாடுறதுக்கு முன்னாடி சைக்கிள் டேயோட வரலாற தெரிஞ்சுகிட்டு போலாமா….

அமெரிக்காவ சேர்ந்த காலேஜ் புரஃபசர் ஒருத்தர்… தன்னோட வகுப்புல சமூகறிவியல் பாடம் நடத்திட்டு இருப்பாராம்… அந்த நேரம் பாடத்தோட சேத்து தன்னோட கொள்கைகளையும் மாணவர்கிட்ட பரப்பிட்டு இருப்பாரு… அதுல ஒன்னு தான்… சைக்கிள் டே… அதாவது மக்களுக்கும் உலகத்துக்கும் ரொம்பவே பயணளிக்க கூடிய இந்த சைக்கிளுக்கு ஏன் ஒரு டே கொண்டாட கூடாதுனு பேச ஆரம்பிச்சது… அது ஐனா சபை காது வரைக்கும் போயிருக்கு… அதுகப்புறம் சைக்கிள் ஓட்டுறதுனால மக்கள் நலன் மேம்படும்னு… ஏப்ரல் 12, 2018 அன்னைக்கு… எப்பா உலக மக்களா எல்லாரும் நல்லா கேட்டுக்கோங்கப்பா… இனிமேல் ஜூன் 3 ஆம் தேதி வந்தாலே நம்ம எல்லாரும் சேர்ந்து உலக சைக்கிள் தினம் கொண்டாடுறோம்னு… உலக சைக்கிள் தினத்தை அறிவிச்சுட்டாங்க… நம்ம ஐநா சபை… அப்டி உருவானது தான் இந்த டே…

இன்னைக்கு நாம ஓட்டுற சைக்கிளுக்கு மிதிச்சு ஓட்ட பெடல் இருக்கு… ஆனா முதல் முதலா கண்டு பிடிச்ச சைக்கிளுக்கு பெடல் கிடையாதுனு உங்களுக்கு தெரியுமா..? … கண்டிப்பா உங்களுக்கு தெரிஞ்சுருக்காது வாங்க அந்த STDஐயும் தெரிஞ்சுக்கலாம்…

1817 ல ஜெர்மன் நாட்டை சேர்ந்த கார்ல் வான் டிராய்ஸ் தான் உலகின் முதல் சைக்கிளை கண்டு பிடிக்குறாரு… அதாவது தன்னோட வீட்டுல இருந்த உடைஞ்சு போன குதிரை வண்டில இருந்து ரெண்டு சக்கரத்தை எடுத்து ஒரு வண்டிய ரெடி பன்றாரு… கடைசியா அதுல ஏறி உக்காந்து ரெண்டு காலால நகட்டி நகட்டி இந்த உலகின் முதல் சைக்கிளை ஓட்டிருக்காரு… அப்டி உருவான இந்த கண்டு பிடிப்ப தான்… இன்னைக்கு நாம மிதிச்சு ஜாலியா சைக்கிள் ஓட்டிட்டு இருக்கோம்…

அதுமட்டுமில்லாம இன்னைக்கு என்ன தான் பைக் எடுத்து கெத்து காட்டி ஊர சுத்துனாலும்… அந்த பைக்குக்கெல்லாம் முன்னோடி இந்த சைக்கிள் தான்… இன்னும் புரியுர மாதிரி சொல்லனும்னா… அந்த பைக்குக்கே விதை போட்டவன் நான் தான்னு சொல்லுது இந்த சைக்கிள்…

சரி வாங்க சைக்கிள் குள்ள இருக்க சுவாரஸ்யமான விசயங்களை தெரிஞ்சுக்கலாம்…

உலகத்துலயே சைக்கிள் அதிகமா சைக்கிள் யூஸ் பன்றவங்க யாருனு பாத்தா நம்ம நெதர்லாந்து காரங்க தானாம்… அதாவது 16,652,800 பேர் மக்கள் தொகை இருக்குற இந்த நாட்டுல…. 16,500,000 பேரு சைக்கிள் யூஸ் பண்றாங்கலாம்…. அதுக்காக இந்த நாட்டை போக்குவரத்து வசதி இல்லாத நாடுனு நெனச்சிடாதிங்கப்பா… மெட்ரோ , பஸ் , கார்னு ஏகப்பட்ட ட்ரான்ஸ்போர்ட் இருந்தாலும்… பொது மக்கள் விரும்புறது என்னவோ இந்த சைக்கிளதானம்….

வீட்டுக்கு ஒரு மரம் வளக்குற மாதிரி… டென்மார்க் மக்கள் வீட்டுக்கு ஒரு சைக்கிள் வச்சிருக்காங்கப்பா… பக்கத்துல இருக்க அண்ணாச்சி கடைல முட்டை , மிளகாய் தூள் வாங்கனும்னா நம்மள மாதிரி பைக்லலாம் போக மாட்டாங்கலாம்… சைக்கிள்ல தான் போவாங்கலாம்…

நம்ம உலகத்துல எத்தனையோ பொருட்கள் உற்பத்தி ஆகுது… அதுல நம்ம சைக்கிள் ஒரு எவ்வளோ உற்பத்தி ஆகுதுனு பாத்தா… ஒரு நாளைக்கு மட்டுமே 3,64,000 சைக்கிளை உற்பத்தி பன்றாங்கலாம்…

உலகத்துலயே ரொம்ப காஸ்ட்லியான சைக்கிள் எதுனு பாத்தா…. இதோ இந்த சைக்கிளை காட்டுறாங்கப்பா… அப்டி என்ன இந்த சைக்கிளோட ஸ்பெஷல்னு பாத்தா… தங்க தகடால இந்த சைக்கிளை மோல்டிங் செஞ்சு ரெடி பன்னிருக்காங்கலாம்… சரி அதுலாம் இருக்கட்டும் விலை எவ்வளோனு விசாரிச்ச 1 மில்லியனாம்… அதாவது நம்ம ஊரு காசுக்கு 10 லட்சம்னு சொல்றாங்க….

இந்த சைக்கிளை நீயே வச்சுக்கோப்பா நான் எங்க அப்பாவோட பழைய ஒட்ட சைக்கிளை எடுத்து ஓட்டிகிறேன் …

நம்ம மனுச பயலுக… எந்த ஒரு விசயத்தை எடுத்துகிட்டாலும் உலகத்துலயே எது பெருசா நம்மள பிரம்மிக்க வைக்குது… எது சிறுசா நம்மள ஆச்சர்ய பட வைக்குதுனு ஆராய்ச்சி பன்ன ஆரம்பிச்சுடுவாங்க…. அந்த அடிப்படைல உலகத்துலயே எது பெரிய சைக்கிள்னு பாத்தா…. அமெரிக்காவ சேர்ந்த STOOPIDTALLER அப்டிங்குற ஒரு சாக குழு உருவாக்குன இந்த சைக்கில் தான் இப்போதைக்கு உலகத்துலயே பெருசாம்… அதாவது இந்த சைக்கிளோட உயரம் மட்டுமே 20 அடிக்கு தயார் செஞ்சு… அதை ஓட்டியும் காட்டி… கின்னஸ் ரெக்கார்ட் பன்னிருக்காங்கப்பா…

நாமலாம் சின்ன வயசுல சைக்கிள் ஓட்டும் போது ஐட்டு பத்தலனா…. அரை பெடல் அடிச்சாவது சைக்கிள ஓட்டிடுவோம்… ஆனா இந்த சைக்கிள ஓட்டனும்னா இதுக்குனு தனியா ஏனி வச்சு தான் ஏறனும் போல…

சரிப்பா பெரிய சைஸ் சைக்கிள பாத்துட்டோம் அப்டியே உலகத்துலயே குட்டி சைஸ் சைக்கிளயும் பாத்துடலாம் பாத்தா… ஒரு வயசானவரு கீழ எதையோ தொலைச்ச மாதிரி தேடிட்டு வந்தாரு... நானும் பரிதாபப்பட்டு என்னங்கையா எதாச்சும் சில்றை கீழ விழுந்துச்சானு கேட்டா… அட நான் சில்றை தேடலப்பா சைக்கிள் ஓட்டிட்டு இருக்கேன்னு நம்மள

ஆச்சர்யப்படுத்திட்டாரு…. ஆமாங்க இவர் ஓட்டிட்டு இருக்க இந்த சைக்கிள் தான்… உலகத்துலயே குட்டி சைக்கிளாம் அப்டினா இதோட சைஸ் என்னனு பாத்தா வெறும் 8 சென்டி மீட்டர் தானாம்…

சின்ன சைக்கிள் , பெரிய சைக்கிள்னு இது ரெண்டுத்தையும் பாத்து திகைச்சு போன நம்மள மேற்கொண்டு திகைச்சு போக வைக்குது…. இந்த சைக்கிள்…

ம்ம்ம் உருவத்த பாத்தே கண்டுபிடிச்சுருப்பிங்கனு நெனைக்கிறேன்… ஆமாங்க இது தான் உலகின் நீளமான சைக்கிள் …. கடந்த 2016 அமெரிக்க சேந்தவங்க இந்த சைக்கிள உருவாக்கிருக்காங்க… இரும்பு பைப்ப வச்சு ரெடி பன்ன இந்த சைக்கிள் 117 நீளமாம்…

ஆன்… அமெரிக்கா காரங்க நீங்க ஒன்னு உருவாக்குனா…. நாங்களும் ஒன்னு உருவாக்குவோம்னு ஆஸ்த்ரேலியா காரங்க வீம்புக்குனே உருவாக்குனது தான் இந்த நீளமான சைக்கிள்… சரி இந்த சைக்கிளோட நீளம் என்னனு கேட்டா 135 அடி நீளமாம்… அதாவது 6 பேர் உக்கார வேன்டிய நம்மூர் சேர் ஆட்டோல 20 பேர் ஏரி போற மாதிரி… இந்த சைக்கிள்ல 50 பேருக்கு மேல உக்காந்து ஓட்டிட்டு போலாமா…அடுத்து நாம பாக்கப்போறது மாஸா…. கிளாஸா… வேறலெவல் சைக்கிள தான் பாக்கப்போறோம்….

என்னப்பா சைக்கிள்னு சொல்லி ஓவரா பில்டப்லாம் ஏத்தி இப்போ பென்ஸ் கார காட்டுறீங்களேனு பாக்குறீங்கள… தம்பி கார் டோர கொஞ்சம் ஓப்பன் பன்னி காட்டுப்பா…. ம்ம்ம் இப்போ இது சைக்கிள்னு நம்புறீங்களா…

போலந்து நாட்ட சேந்த இவரு பயங்கர சைக்கிள் பிரியராம்… எப்பவுமே ஒய்யாரமா உக்காந்து ஓட்டுற சைக்கிள… சாவகாசமா சாஞ்சிகிட்டே கிட்டே ஓட்டுனா எப்டி இருக்கும்னு கார்ல உக்காந்து ஓட்டுற மாதிரி கண்டுபிடிச்சது தான் இந்த கார் சைக்கிள்…

ம்ம்ம்ம்… பெட்ரோல் செலவு இல்லாம… மின்சார செலவு இல்லாம… தலைவன் என்னா சொகுசா போய்ட்டு வரான் பாருங்க

இவ்வளோ நேரம் தரைல போகுற சைக்கிள தான பாத்தோம்… ஆனா இப்போ பறக்குற சைக்கிள பாக்கபோறோம்… பிர்ட்டிஸ்ஸ சேந்த ரெண்டு பேருக்கு ரொம்ப நாளா ஒரு பறக்குற சைக்கிள உருவாக்கனும் ஆசையா இருந்துருக்கு போல… அந்த ஆசைய நிறைவேத்ததான் ரென்டு பேரும் சேந்து ஒரு சைக்கிளை பாராகிளைடிங்கோட இனைச்சு பறக்குற சைக்கிளை ரெடி பன்னிருக்காங்க… அன்னைல இருந்து சின்ராச கைல பிடிக்கவே முடியல… வானத்துல சிட்டா பறந்து திரியுறாருனா பாருங்க….

இவ்வளோ நேரம் தரைலயும் வானத்துலயும் ஓடுன சைக்கிள பாத்தோம்… ஆனா இங்க ஒருத்தரு தண்ணில ஓட்டுற மாதிரி ஒரு சைக்கிளை உருவாக்கி …. அதை நமக்கு ஓட்டியும் காட்டிருக்காரு பாருங்க….

யாராவது சைக்கிள்ல லாங்ட்ராவல் பன்னிருகீங்களா… ஆங் பன்னிருக்கேன் வீட்டுல இருந்து மெரினா பீச் வரை பன்னிருக்கேன்னு சும்மா சீன போடுவீங்க… இதுலாம் என்னங்க தூரம்… ஸ்காட்லான்ட சேர்ந்த Guinness Mark Beaumon அப்டிங்குற சைக்கிள் வீரர் 11,315 கிலோ மீட்டர் சைக்கிள்லயே ட்ராவல் பன்னி கின்ன்ஸ் ரெக்கார்டு பன்னிருக்காரு… அதாவது 78 நாள்… எப்டி 78 நாள்ல இந்த ரெக்கார்ட பன்ன்ருகாரு… சரி அப்டி எங்கப்பா போய்ட்டு வந்தாருனு பாத்தா… லன்டன் பாரிஸ் நகரத்துல ஆரம்பிச்ச தன்னோட பயனத்தை ஆஸ்த்ரேலியாவுல முடிச்சுருக்காரு… சார் நீங்க எவ்வளோ வேனா சீன் போடலாம் சார்…

அடுத்து நாம பாக்கப்போறது பிரபல சைக்கிள் சாகச வீரரான Danny அ தான்… அட அப்டி என்ன பன்னாருனு பாத்தா… இவருகிட்ட சைக்கிள் குடுத்தா ரோட்டிலலா ஒட்ட மாட்டாராம்…. மொட்ட மாடி , பள்ள மேடு , வின்ட் மில் , மலைல இருந்து எகிறி குதிக்கிறதுனு இப்டிதான் எதாச்சும் ஆபத்தான சகசங்களை பன்னிட்டு இருப்பாரு…

வர 3 தேதி என்ன பன்றீங்க ... பறக்கும் ராசாலியே… ராசாலியே நில்லுனு பைக்க எடுத்து சுத்தி திரிஞ்ச நீங்க… பைக்கலாம் ஓரம் கட்டி வச்சிட்டு உங்க வீட்டுல இருக்க பழைய சைக்கிலோ இல்ல புது சைக்கிலோ …. அட அதுவும் இல்லனா ஓட்டாம சும்மா வச்சிருக்க பிரன்ட்டு கிட்ட ஓசி சைக்கில வாங்கிட்டு… இள நெஞ்சே வா தென்றல் தேரினில் எங்கும் போய் வரலாம்…. அட அங்கேப் பார் மஞ்சள் வான்முகில் கையால் நாம் தொடலாம்னு இயற்கைய ரசிச்சுகிட்டே ஜாலியா எங்கயாச்சும் ரைடு போய்ட்டு வரனுமாம்….


Next Story

மேலும் செய்திகள்