பிரமதர் மோடியை புகழ்ந்து தள்ளிய ஜே.பி.நட்டா | PM Modi | Jp Nadda

x

டெல்லி மாநில பாஜகவின் புதிய அலுவலகத்திற்கு அடிக்கல் நாட்டிய அவர், விழாவில் இவ்வாறு தெரிவித்தார். பிரதமர் மோடி வெறும் நாட்டின் அரசியலை மட்டுமல்லாமல், தேசிய அரசியலின் கலாச்சாரத்தையே மாற்றி உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். பாஜக மற்ற கட்சிகளுடன் வேறுபட்ட கட்சி என்று தெரிவித்த அவர், மற்ற கட்சிகள் வெறும் அதிகாரத்திற்காக கொள்கையில் இருந்து விலகி சென்று கொண்டிருப்பதாகவும், கம்யூனிஸ்ட் கட்சி கூட பாஜகவை எதிர்கொள்ள காங்கிரஸ் உடன் கைகோர்த்து இருப்பதாகவும் குறிப்பிட்டார். ஆனால் பாஜக தமது கொள்கையில் வலுவாக இருப்பதாக தெரிவித்த அவர், பாஜக என்கிற கட்சி மட்டுமே கொள்கையை கொண்டுள்ளது என குறிப்பிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்