அசுர வேகத்தில் மோதி தூக்கி வீசப்பட்ட பத்திரிகையாளர் - சாலையை கடந்த போது பயங்கரம்

x

தெலங்கானா மாநிலம் ஹயாத் நகரில் கார் மோதிய விபத்தில் நிவேதிதா சூரஜ் என்ற இளம் பத்திரிகையாளர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அலுவலக பேருந்து ஏறும் இடத்திற்கு செல்வதற்காக அவர் சாலையை கடக்கும்போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. நிவேதிதாவுடன் சென்ற சோனாலி என்பவர் இந்த விபத்தில் காயமடைந்து ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த விபத்து குறித்த சிசிடிவி காட்சி வெளியாகி உள்ள நிலையில் தப்பியோடிய கார் ஓட்டுனரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்