வெள்ளை மாளிகையில் தீபாவளி கொண்டாடிய ஜோ பைடன்

x

அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் நடைபெற்ற தீபாவளி கொண்டாட்டத்தில் தனது மனைவியுடன் பங்கேற்ற அதிபர் ஜோ பைடன், அங்கிருந்த இந்தியர்களுடன் உரையாடினார்.

இந்திய வம்சாவளியினர் அதிகம் வசிக்கும் அமெரிக்காவில் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டது.

வெள்ளை மாளிகையில் நடைபெற்ற தீபாவளி கொண்டாட்டத்தை அதிபர் ஜோ பைடனும், அவரது மனைவி ஜில் பைடனும் இணைந்து குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தனர்.

பின்னர் உரையாடிய அதிபர் ஜோ பைடன், உலகிற்கு ஒளியை கொண்டு வரும் ஆற்றலை, நாம் ஒவ்வொருவரும் கொண்டுள்ளோம் என்பதை இந்த தீபாவளி நினைவுப்படுத்துவதாக கூறினார்.

வெள்ளை மாளிகையில் இதுவரை இல்லாத அளவுக்கு முதல் முறையாக பிரமாண்டமாக தீபாவளி கொண்டாடப்படுவதாக குறிப்பிட்ட ஜோ பைடன், அமெரிக்க கலாச்சாரத்தின் மகிழ்ச்சிக்குரிய விழாவாக தீபாவளி இருப்பதற்கு நன்றி தெரிவித்து கொண்டார்.

தொடர்ந்து பேசிய அவர், தெற்காசிய மக்களை புகழ்ந்ததுடன், ஒரே தேசமாக விளங்கும் ஆன்மாவை பிரதிபலிப்பதால் தெற்காசிய மக்களுக்கு நன்றியை தெரிவித்து கொள்வதாக கூறினார்.

பின்னர் வெள்ளை மாளிகையில் கூடியிருந்த இந்தியர்களுடன் அதிபர் பைடன் கலந்துரையாடினார்.

விழாவில் இந்திய வம்சாவளியை சேர்ந்த துணை அதிபர் கமலா ஹாரிஸும் பங்கேற்றிருந்தார்.


Next Story

மேலும் செய்திகள்