ஜிங்கில் பெல்ஸ்.. ஜிங்கில் பெல்ஸ்.. - வந்தாச்சு கிறிஸ்துமஸ்.. களைகட்டும் விற்பனை

x

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்தில் கண்ணை கவரும் கிறிஸ்துமஸ் பொம்மைகள், ஸ்டார்கள் மற்றும் அலங்கார பொருட்களின் விற்பனைகள் சூடுபிடித்துள்ளன.

கிறிஸ்துமஸ் பண்டிகை தொடங்கியதன் அடையாளமாகவும், இயேசு கிறிஸ்துவின் பிறப்பை அறிவிக்கும் விதமாகவும் வீடுகளின் முகப்பில் ஸ்டார்களையும், குடில்களையும் மக்கள் அமைத்து வருகின்றனர்.

இதை வெளிப்படுத்தும் விதமாக, கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகரில் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கான குடில்கள், நட்சத்திரங்கள், கிறிஸ்துமஸ் பொம்மைகள் மற்றும் அலங்கார பொருட்களை பொது மக்கள் ஆர்வமுடன் வாங்கி சென்றனர்.


Next Story

மேலும் செய்திகள்