வீடு வீடாக கத்தியை காட்டி நகை பறிக்க திட்டம் போட்ட திருடர்கள்...பொதுமக்களை கண்டதும் தப்பி ஓட்டம்

x

விளாத்திகுளம் அருகே கத்தியை காட்டி மிரட்டிய மர்ம நபர்கள், நகை பறிப்பில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் கவுண்டம்பட்டியை சேர்ந்தவர்கள் கணேஷ்-ராமலட்சுமி தம்பதியினர். இவர்களது வீட்டிற்குள் புகுந்த 2 மர்மநபர்கள், மூன்றரை பவுன் தங்க நகைகள் மற்றும் 5 ஆயிரம் ரூபாய் பணத்தை பறித்துக் கொண்டு தப்பியோடினர். இதே போல் நாகலாபுரம் அருகே உள்ள சங்கரலிங்கபுரத்தில் நான்கு வீடுகளுக்குள் புகுந்த மர்ம நபர்கள் ஆளை கண்டதும் ஓட்டம் பிடித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த சங்கரலிங்கபுரம் காவல்துறையினர், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்