"ஆடம்பர செலவு பண்ணாதீங்க" "பணத்தை பத்திரமா வைச்சுக்கோங்க" "பெரிய அபாயம் நம்மை நோக்கி வருகிறது"

x

"ஆடம்பர செலவு பண்ணாதீங்க" "பணத்தை பத்திரமா வைச்சுக்கோங்க" "பெரிய அபாயம் நம்மை நோக்கி வருகிறது" - உலகின் பெரும் கோடீஸ்வரர் விடுக்கும் எச்சரிக்கை

பொருளாதார மந்தம் ஏற்பட வாய்ப்புள்ளதால், பொது மக்கள் தங்களின் ஆடம்பர செலவுகளை தவிர்க்க வேண்டும் என்று அமேசான் நிறுவனர் ஜெஃப் (Jeff) பெசோஸ் கூறியுள்ளார்.

உலகின் மிகப் பெரிய ஆன்லைன் விற்பனையகமான அமேசானை உருவாக்கி நடத்தி வரும் ஜெஃப் (Jeff) பெசோஸ், உலகப் பணக்காரர்கள் வரிசையில் நான்காம் இடத்தில் உள்ளார்.

அமெரிக்காவில் பொருளாதார மந்தம் ஏற்பட உள்ளதாக அமெரிக்க வாடிக்கையாளர்களுக்கு எச்சரிக்கை செய்த ஜெஃப் (Jeff) பெசோஸ், டி.வி, கார் போன்ற அதிக விலை கொண்ட பொருட்களை வாங்குவதை தவிர்க்குமாறு கூறியுள்ளார்.

ஆடம்பர பொருட்களை வாங்குவதை ஒத்தி வைத்து விட்டு, பொது மக்கள் தங்களின் பணத்தை சேமித்து வைக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.

அமேசான் நிறுவனம் மூலம் டிவி உள்ளிட்ட பல்வேறு விலை உயர்ந்த பொருட்கள் விற்பனை செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.

செலவுகளை குறைக்க, டிவிட்டர், பேஸ்புக், அமேசான் உள்ளிட்ட பல்வேறு டெக் நிறுவனங்கள் ஆட்குறைப்பு செய்து வருவது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்