ஜெ.வின் நடன பயணம் ஒரு ரீவைண்ட்... குச்சிபுடி ஜெ.க்கு அத்துபுடி..! 'மாணவியாக ஜெயலலிதா' மலரும் நினைவுகள்

x
  • இதே நாளில் கடந்த 1948 ஆம் ஆண்டு மைசூரில் பிறந்த கோமளவல்லி... பிறகு சினிமா துறைக்குள் நுழைந்து... பலரையும் தனது வசீகர அழகினால் வென்றார்.
  • அரசியலில் மிக பெரிய ஆளுமையாக திகழ்ந்தவரின் திரையுலக பயனம் மிகவும் மென்மையானது... தனது தாய் ஒரு நடிகை என்பதாலோ என்னவோ... குழந்தை பருவத்திலேயே நடனத்தின் மீது காதல் கொள்ள ஆரம்பித்துவிட்டார், ஜெயலலிதா.
  • மைசூர் அருகே மேல்கோட்டையில் பிறந்து.. பெங்களூரு மற்றும் சென்னையில் தனது பள்ளி படிப்பை தொடர்ந்தவர்... படிப்போடு சேர்த்து நாட்டிய கலை மீதும் அதீத ஈர்ப்பு கொண்டிருந்தார்.
  • 1960-ல் மயிலாப்பூர் ரசிக ரஞ்சனி அரங்கில் 12 வயது சிறுமியான ஜெயலலிதா ஆடிய பரத நாட்டியத்தை பார்த்து நடிகர் திலகம் சிவாஜி கணேசன் புகழ்ந்து பேசியிருந்ததை இந்த இடத்தில் நாம் நிச்சயம் பதிவு செய்தாக வேண்டும்.
  • பரதம், மணிப்புரி, கதக் உள்ளிட்ட பல நடனங்களில் அவர் கைத்தேர்ந்தவர் என்றாலும் குச்சிபுடி அவருக்கு அத்துபுடி.

Next Story

மேலும் செய்திகள்